Pongu Tamizh Pongu Tamizh  

கொழும்பில் தனியார் வானொலி நிலையம் முகமூடி மனிதர்களால் தாக்கப்பட்டது!

கொழும்பில் தனியார் வானொலி நிலையம் முகமூடி மனிதர்களால் தாக்கப்பட்டது!

 

சிறிலங்காவின் பிரபல தனியார் வானொலி ஒலிபரப்பு நிறுவனமான 'வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க்' இன் வெற்றி எப்.எம், சியத்த எப்.எம்., றியல் ரேடியோ ஆகியனவற்றின் செய்திப்பிரிவு இன்று அதிகாலை முகமூடி அணிந்த ஆயுதங்கள் தாங்கிய நபர்களினால் தாக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 1.20 மணியளவில் முகமூடியணிந்த 12 பேர் கொண்ட நபர்கள் அலுவலகத்திற்குள் கூரிய ஆயுதங்களுடனும் நுழைந்ததாகவும், பின்னர் அவர்கள் வைத்திருந்த பெற்றோல் குண்டை செய்திப்பிரிவினை நோக்கி வீசிவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலின் போது அந்நிறுவனத்தின் செய்திப்பிரிவு உத்தியோகத்தர்களான ரஜனிகாந்த் மற்றும் லெனின் உட்பட பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முகமூடியணிந்த 15 பேர்கொண்ட இனந்தெரியாத நபர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து, செய்திப் பிரிவு எங்கே எனக் கேட்டவாறு பாதுகாப்பு உத்தியோகத்தரையும் செய்திப்பிரிவு உத்தியோகத்தர்களையும் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இவ் ஊடக நிறுவனம் மீதான தாக்குதல் தொடர்பில் இப்போதைக்கு கருத்து தெரிவிக்க முடியாது என ஊடக அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. கணேகல தெரிவித்தார். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல்வேறு மட்டங்களிலும் பலத்த கண்டனம் எழுப்பப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

 
புதினங்கள்
செய்திகள்